சுற்றித்திரியும் புலியால் மக்கள் அச்சம்... கேமரா பொருத்தி கண்காணிப்பு

ஊட்டி: புலி நடமாட்டத்தால் அச்சம்... உதகமண்டலம் அருகே புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கால்நடைகளை வேட்டையாட புலி சுற்றித்திரிவதால் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். உட்கை அருகே இந்து நகர் பகுதியில் கடந்த வாரம் ஒரு பசுவை புலி கடித்து கொன்றது.


புலி வேட்டையாடிவிட்டு அமர்ந்திருப்பதை பார்த்து பீதியடைந்த சிலர் வீடியோ எடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தினர்.

இந்நிலையில், காளான் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்ததால், வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பசுவை வேட்டையாட புலி பதுங்கியிருந்த இடமெல்லாம் உரோமங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புலிகளின் நடமாட்டத்தால் உதகை, மார்லிமந்து, புலிச்சோலை, ரோஜா மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.