கர்நாடகா மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .. அதிர்ச்சியில் மக்கள்

கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மின் கட்டணம் கடந்தாண்டு அதிகரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின் தற்போது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னதாக 200 யூனிட் இலவச மின்சாரத்தை அறிவித்த அரசு தற்போது 70 பைசா கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து இந்த புதிய மின்கட்டணம் வருகிற ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

அதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) வழங்கிய கட்டண உத்தரவின்படி பில் உருவாக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஏப்ரல் மாதம் நிலுவையில் உள்ள தொகையும் மே மாதத்துடன் சேர்த்து ஜூன் மாதத்தில் வசூலிக்கப்படும் என்றும் , அடுத்த மாதம் நிலைமை சரியாகிவிடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.