கோவை மாநகர பகுதியில் பொதுஇடங்களில் போஸ்டர் ஒட்ட தடை

கோவை: போஸ்டர் ஒட்ட தடை விதிப்பு... கோவை மாநகர பகுதியில் பொது இடங்களில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்படுவதால் தற்போது மாநகரத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பலர் பலவிதமான போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதனை கண்டிக்கும் விதமாக கோவை மாநகராட்சி எல்லையில் பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரம் எழுதவோ சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது.

இந்த எச்சரிக்கையையும் மீறி சுவரொட்டி ஓட்டுபவர்கள் மீதும் மற்றும் விளம்பரங்கள் எழுதுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோவை மாநகர பகுதியில் பல்வேறு சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது அது கோவை முழுவதும் பேசு பொருளாக மாறி பரவி வந்தது. ஏற்கனவே இது போல போஸ்டர் ஒட்டுவதற்குத் தடை எனச் சென்னையில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.