மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக போலீசார்... நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை

மதுரை: செம யோசனைப்பா என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்துக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா.


மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள், பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்கள். இந்த யோசனைக்கு பொதுமக்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களை கிண்டல், கேலி செய்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் சமூக விரோதிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.