மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ல் மின்தடை

மதுரை : தமிழகத்தில் மாவட்டம்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இத்தகைய பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள், மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதனை தவிர மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 29) துணை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரப்பாளையத்தில் பேச்சியம்மன் படித்துறை, தமிழ் சங்கம் ரோடு, திலகர் திடல், பாரதியார் ரோடு, விவேகானந்தர் ரோடு, பெரியார் நிலையம் போன்ற இடங்களிலும், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நேதாஜி ரோடு, வடக்கு சித்திரை வீதி

மேலும் சோமசுந்தர அக்கரகாரம், சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின் ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு சித்திரை வீதி போன்ற பகுதிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.