இஸ்ரேலில் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு பிரதமர் கண்டனம்

ஜெருசலேம்: மக்கள் போராட்டத்திற்கு கண்டனம்... இஸ்ரேலில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மனைவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.

இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசின் நீதித்துறை சீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் அருகே டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதையடுத்து சாரா நெதன்யாகு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த செயலுக்கு பிரதமர் நெதன்யாகுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.