இந்தியாவில் 5ஜிக்கு மத்தியில் 6ஜி வர உள்ளதாக பிரதமர் தகவல்

இந்தியா: இந்தியாவில் இணையத்தின் வேகத்தை உயர்ந்தும் வகையில் 2ஜி யில் இருந்து நாம் இப்போது 5ஜி க்கு வந்து விட்டோம். தற்போது நாட்டில் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக தீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. அதில் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஏலம் விடப்பட்டது.

முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. அதற்கு பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி சேவைகள் சென்றடையும் என்றும் 4ஜி வேகத்தை காட்டிலும் 10 மடங்கு கூடுதலான வேகத்தில் 5ஜி இணைப்பு இருக்கும் என கூறியுள்ளார்.

இதைஅடுத்து ஏற்கனவே போபால், டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடைபெற்றது. மேலும் 20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைக்கலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது இந்திய மக்கள் 5ஜி சேவையை எதிர்பார்த்து வரும் நிலையில் 6ஜி சேவை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். 2023-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.