சுதந்திர தினம் .. அரசு ஊழியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியா: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இச்சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் பொருட்டு இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி பல்வேறு பொதுமக்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தினர்.

அதே போன்று இந்த வருடமும் வருகிற ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரையிலும் 3 நாட்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் வீடுகளில் ஏற்றப்படும் மூவர்ணக் கொடியின் புகைப்படத்தை hargartiranga.com என்கிற இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கட்டாயமாக அரசு ஊழியர்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.