பாரீசில் ராணுவ வீரர்கள் சூழ்ந்து வர வரவேற்கப்பட்ட பிரதமர் மோடி

பாரீஸ்: சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் சூழ்ந்து வர பிரதமர் மோடி காரில் விழா நடக்கும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டார்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவரது மனைவியும் வருகை தந்த பிறகு தேசிய தினவிழா விழா தொடங்கியது. விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் பிரான்ஸ் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் முப்படை வீரர்களும் இதில் பங்கேற்று அணிவகுப்பில் ஈடுபட்டனர். இந்தியாவின் விமானப் படைக்கு சொந்தமான 4 ரபேல் விமானங்களும், சி 17 போர் விமானங்களும் வானில் பறந்து சாகசம் புரிந்தன.

இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் சென்னை இந்த விழாவில் பங்கேற்றது. பிரஸ்ட் துறைமுகத்தில் இந்த கப்பல் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது.