உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று உரை

ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்கில் இந்தியா (அதாவது திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தற்போது இன்று உலக இளைஞர் திறன் கொண்டப்படுவதை முன்னிட்டும், திறன் இந்தியா திட்டம் தொடங்கியதன் 5-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் இந்த உரையை நிகழ்த்த உள்ளார்.

இதுகுறித்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இழந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி, பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.