அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர்

புதுடெல்லி: இந்தியா வந்த ஜப்பான் பிரதர்... அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, கர்நாடக கலையை போற்றும் வகையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சந்தன புத்தர் சிலையை பிரதமர் மோடி வழங்கினார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவிற்கு சென்ற ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரதமர் மோடியுடன் பூங்காவை பார்வையிட்டார். பின்னர் ஜப்பான் பிரதமர் கிஷிடா அங்கு அமைக்கப்பட்டிருந்த பானி பூரி கடையில் பிரதமர் மோடியுடன் இணைந்து பானி பூரி சாப்பிட்டு மகிழ்ந்தார். மாம்பழ பன்னாவையும் லஸ்ஸியையும் பருகினார். அதன்பின் இருவரும் பூங்காவில் உள்ள பால் போதி மரத்தை பார்வையிட்டனர்.