இந்திய உணவு விடுதியில் ஊழியருக்கு உதவிய இளவரசர் வில்லியம்

பர்மிங்ஹாம்: ஊழியருக்கு உதவிய இளவரசர்... இங்கிலாந்து இளவரசர் வில்லியம், பெர்மிங்ஹாமில் உள்ள இந்திய உணவு விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு ஊழியருக்கு உதவும் வகையில் தொலைபேசியில் பேசினார்.

உணவு விடுதிக்கு இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் உடன் சென்ற நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் டேபிளை முன்பதிவு செய்ய தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அவருக்கு பதில் அளித்த இளவரசர் வில்லியம், உணவு விடுதியின் உரிமையாளரிடம் தேவையான தகவல்களை பெற்று வாடிக்கையாளருக்கு தெரிவித்தார்.