வடலூரில் தனியார் வேலைவாய்ப்பு

வடலூர் : இந்தியாவில் ஊரடங்கு, பொது முடக்கம் காரணத்தால் மக்கள் பெரும்பாலானோர் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் வறுமையில் உணவுக்கு கூட வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. பின் அரசின் அயறாத முயற்சியினால் அனைத்து மக்களுக்கும் சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், உணவு போன்றவை கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று குறைந்துள்ளதால் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பினை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் பயன் பெறும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமானது பண்ருட்டி வட்டம், மருங்கூர், கொள்ளுக்காரன்குட்டை இல் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்க உள்ளது.

எனவே 8,10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்லூரியில் கலை, அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படிப்புகள் பயின்றுள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ள நபர்கள் 04142-290039, 9499055908 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கி.சிவசுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.