திட்ட இயக்குநர் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு


சென்னை: பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு என அழைக்கப்படும் Education Management Information System எமிஸ் என்ற தளத்தை ஆசிரியர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி கல்வி சாரா மன்ற செயல்பாடுகளின் அனைத்து விவரங்களையும் வருகிற 10ஆம் தேதிக்குள் (10.10.2023) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி ஐஏஎஸ் பிறப்பித்து உள்ளார்.

எனவே அதன் படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பள்ளி அளவில் நடந்த போட்டிகள், ஆகஸ்ட் மாதம் வட்டார அளவில் நடந்த போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் செப்டம்பர் மாதம் பள்ளி அளவில் மன்ற நிகழ்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நாள் அக்டோபர் 13 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க கடைசி நாள் அக்டோபர் 16.EMIS தளத்தில் பள்ளி அளவிலான விவரங்களை பதிவேற்றம் செய்தவுடன் மாற்றம் செய்ய முடியாது. எனவே எவ்வித தவறும் இன்றி சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.