ஊரடங்கில் தளர்வு... மக்கள் நடமாட்டம் பற்றி முதல்வர் நேரில் ஆய்வு

முதல்வர் நேரில் ஆய்வு... ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய அரசு மே17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சில தளர்வுகள் காரணமாக புதுச்சேரியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் கடைகள் திறப்பதன் நேரம் மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து முதல்வர் நாராயணசாமி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். புது பஸ் நிலையம் மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள தற்காலிக காய்கறி அங்காடியை ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி, காய்கறிகளின் விலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய அவர், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி- தமிழக எல்லையான முத்தியால்பேட்டை பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.