சினிமா படப்பிடிப்பு தளத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு ஒருசில நிபந்தனைகளுடன் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

* 75 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதி

* 6 அடி தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். படப்பிடிப்பு தளம் மட்டுமின்றி சவுண்ட் ரெக்கார்டிங், எடிட்டிங் அறைகளிலும் கடைபிடிக்க வேண்டும்

* படப்பிடிப்புக்கு பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்க கூடாது

* வெளிப்புற படப்படிப்பு என்றால் அந்த ஊரின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்

* உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனிப்பாதைகள் உருவாக்க வேண்டும்

* படப்பிடிப்பு தளம், வாகனங்கள், மேக்கப் அறை, கழிவறை என அனைத்து இடங்களும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்

* பயன்படுத்திய மாஸ்க், கையுறைகள் போன்ற பொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்குபயிற்சி அளிக்க வேண்டும்

* கேமரா முன்னால் இருக்கும் நடிகர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்

* ஆடைகள், விக், மேக்கப் பொருட்கள் போன்ற பகிரக்கூடிய பொருட்களை முடிந்தவரை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்

* முடிந்தவரை மைக் பயன்படுத்தக் கூடாது. அல்லது கண்டிப்பாக பகிராமல் இருக்க வேண்டும்

* படபிடிப்பில் கலந்துகொள்வர்களின் மருத்துவ விவரம், பயண விவரம் உள்ளிட்டவைகளை கண்காணித்து சரியாக கடைபிடிக்க வேண்டும்

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து படப்பிடிப்பு குழுவினர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது