இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

இந்தியா: தரவரிசை பட்டியல் வெளியீடு ... இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.

இதையடுத்து தற்போது கலந்தாய்வுகள் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து தற்போது இந்திய மருத்துவம், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார்.

அரசு ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1660 இடங்கள் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த 4,386 மாணவர்களில் 4,092 மாணவர்கள் தகுதி பெற்று தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.