ரயில்வே இணையதளம் ஓப்பன் ஆவதில் சிரமம்

ரயில்வே இணையதளம் ஓப்பன் ஆவதில் சிரமம்... நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று முதல் ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று மாலை துவங்கியது. ஆனால் பலரும் ஒரே நேரத்தில் இணையதளத்திற்குள் வந்ததால் இணையதளம் ஓப்பன் ஆவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் மீண்டும் மாலை 6 மணிக்கு முன்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்து அரசின் தளர்வுகள் அடிப்படையில் நாளை ( மே.12 ) முதல் முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. குறிப்பாக நாளை முதல், 15 பயணியர் ரயில்கள் மட்டும் இய ஒரே நேரத்தில் இணையதளத்திற்குள் வந்ததால் இணையதளம் ஓப்பன்க்கப்பட உள்ளன.

டில்லியில் இருந்து, திப்ருகர், அகர்த்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்புர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மாட்கோன், மும்பை, ஆமதாபாத் மற்றும் ஜம்மு தாவிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும். இவை, இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.இதற்கென இன்று (மே.11) மாலை 4 மணிக்கு முன்பதிவு ஆன்லைனில் துவங்கியது.

ஆனால் இந்த இணையதளத்தில் டிக்கெட் உறுதியானவர்கள் மட்டும் வரும் 7 நாட்களுக்கு பயணித்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ரயில்வே டிக்கெட் வைத்திருப்போர் மட்டும் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.இதனால் பலரும் இன்று மாலை 4 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பலரும் முயற்சித்தனர்.

ஆனால் பலருக்கும் இணையதளம் ஒப்பன் ஆகவில்லை. இதனால் பலரும் திணறினர். ரயில்களின் விவரங்கள் பதிவேற்றம் நடப்பதால் இணையதளம் ஒப்பன் ஆவதில் சிக்கல் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு முன்பதிவு துவங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.