சென்னையில் நேற்று இரவு முதல் மழை ... பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை : சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணாநகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தொடர் மழையால் புழல், சோழவரம், கண்ணங்கோட்டை ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 967 கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 66 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகள் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணங்கோட்டை, கண்டிகை ஏரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.