ரஜினிகாந்தின் அரசியல் முடிவு; தலைவர்களின் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வருகின்றன சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கட்சிகளுக்கு இரண்டு நிர்வாகிகளை நியமித்தார். 31-ம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியல் சூடுபிடித்தது. இந்நிலையில் இன்று ஒரு நீண்ட அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் கட்சி தொடங்கவில்லை. கட்சி ஆரம்பித்து அரசியலுக்க வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இது ரஜினிரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரஜினிகாந்த் முடிவு குறித்து தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்: ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியமே எனக்கு முக்கியம். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை சந்திப்பேன்.

ஜி.கே.வாசன் : ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

கடம்பூர் ராஜூ: ரஜினி முடிவு அவரது விருப்பத்தை சார்ந்தது. அதை விமர்சிக்க விரும்பவில்லை. கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினி எதிர்காலத்தில் அ.தி.மு.க.வுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்

சீமான்: ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.

பொன்முடி: உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான்.

அன்வர் ராஜா: அ.தி.மு.க. ஆட்சியை ஆதரிப்பார் ரஜினி.

சகோதரர் சத்ய நாராயணா: ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போது தான் எனக்கே தெரியும்.

தொல். திருமாவளவன்: வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்தின் ஒரு துணிச்சலான முடிவை நான் வரவேற்கிறேன்.

ஆடிட்டர் குருமூர்த்தி: ரஜினி 1996 போலவே 'வாய்ஸ்' அரசியலில் ஈடுபடுவார்.