ராமர் கோவில் கட்டுமானக்குழு தலைவர் திட்டவட்டம்: 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாமாம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தரைதளத்தில் 160 தூண்கள் அமைக்கப்படுகிறது என்று கட்டுமானக் குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் தரைதளத்தில் 160 தூண்கள் அமைக்கப்படுவதாகவும், 12 மணி நேரம் கோவில் திறக்கப்பட்டிருந்தால் 75 ஆயிரம் பேர் சுலபமாக தரிசனம் செய்ய முடியும் என்றும் ராம்மந்திர் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டுமானப் பணிகளில் முதல் தளம் இரண்டாம் தளம் ஆகியவை அடுத்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்றும் தரைதள கட்டடப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடைந்து ஜனவரியில் பக்தர்களுக்காக ஆலயம் திறக்கப்படும் என்றும் ராமர் கோவில் கட்டுமானக் குழு தெரிவித்துள்ளது.

பக்தர்களிடமிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டிருப்பதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.