போக்குவரத்து விதிமீறல் ... புகார் தெரிவிக்க காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு

சென்னை : காவல்துறையின் Whatsapp எண் வெளியீடு ..... சென்னை என்றாலே நமக்கு நியாபகத்திற்கு வருவது போக்குவரத்து நெரிசல் தான். அது மட்டுமில்லாமல் பலர் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காமல் இருப்பதால் ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய போக்குவரத்து விதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து காவலர்களை மீறி சிலர் விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனை அடுத்து ஒரு சிலர் அதனை விதிமீறல் என அறியாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டு வருகின்றனர். அது போல போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து அவ்வாறு ஈடுபடும் போது அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பொதுமக்கள் 9003130103 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.