அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டு வருகிறது. அதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கோயம்பத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன் பின்னர் அக். 1 முதல் அக். 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே போன்று இன்று முதல் அக். 4 வரை, தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.