ஆவினில் பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் 33 லட்சம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2 ஆண்டுகளுக்கு முன் சரிவை சந்தித்த ஆவின் பால் கொள்முதலில் தற்போது எவ்வித முன்னேற்றமும் இல்லை.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவினுக்கு தினசரி பால் கொள்முதல் அளவை சுமார் 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

ஆனால் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாலின் தரமும் குறைவதால் மக்களுக்கு இந்த பாலின் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விற்பனை குறைய தொடங்கி இருக்கிறது. எனவே நிர்வாகம் விரைவாக செயல்பட்டு பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.