விமான நிலையத்தை தனியாரிடம் குத்தகை விடும் முடிவை எதிர்த்து தீர்மானம்

மத்திய அரசு முடிவை எதிர்த்து தீர்மானம்... திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த கேபினட் கூட்டத்தில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி குழுமத்தின் கைகளுக்கு செல்லும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஏற்கனவே மோடிக்கு பிரனாயி விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் மீது காங்கிரஸ் சார்பில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.