இன்று முதல் மேலும் 200 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை

சென்னை: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தக்காளியின் விளைச்சல் குறைந்து அதன் வரத்தும் குறைந்து உள்ளது. எனவே இதன் காரணமாக தக்காளியின் விலை தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து கண்டே வருகிறது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் நிலவரப்படி 1 கிலோ தக்காளி விலை கோயம்பேடு சந்தையில் 150 ரூபாய் உயர்ந்த நிலையில் சில்லறை வணிகத்தில் 180 ரூபாயாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி தக்காளியின் விலை 200 ரூபாய் எட்டியது.

எனவே தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முதல் 500 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு அரசு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அமைச்சர் பெரிய கருப்பன் தகவல் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் மேலும் 200 கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.