உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை மேலும் நீடிக்க வாய்ப்பு

உத்தரபிரதேசம் : உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் மின்னல் தாக்குதல் அதிகமாக இருப்பதாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று வானிலை ஆய்வு மையத்தின் கனமழை முன்னறிவிப்பு காரணமாக உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மற்றும் லக்கிம்பூர் கெரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று 12ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது.


இதையடுத்து இந்த உத்தரவு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக லக்னோ, பாரபங்கி மற்றும் லக்கிம்பூர் கெரி போன்ற இடங்களில் உள்ள பள்ளிகளும் இன்று மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன.வெளியான அறிவிப்பின் படி,

லக்கிம்பூர் கேரியில் உள்ள எட்டு தாலுகாப் பகுதிகளில் கனமழை பெய்ததால், மாவட்ட ஆட்சியர் மகேந்திர பகதூர் சிங், இன்று அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கான உத்தரவை வெளியிட்டு இருக்கிறார். தொடர் மழை காரணமாக விடுமுறை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.