எப்படியெல்லாம் விளம்பரத்திற்கு யோசிக்கிறாங்க பாருங்க!!!

மதுரை: எதை வைச்செல்லாம் டிரெண்ட் அடிக்கிறாங்கள் தெரியுங்களா. ஆறு வருடம் காதலித்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண புகைப்படத்தை வைத்து தனது உணவகத்தின் விளம்பரத்தை போட்டுள்ளார் மதுரைக்காரர் ஒருவர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்துடன் கூடிய மதுரை மக்களின் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகு கோலாகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய அளவிலான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

குறைந்தது ஒரு வார காலத்துக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்த செய்திகளே பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. அவர்களது திருமணத்தில் பறிமாறப்பட்ட உணவுகள் துவங்கி, திருப்பதி சென்றது என அனைத்தும் செய்தியானது.


இந்த நிலையில் மதுரை உணவகத்தின் புகைப்படம் ஒன்றின் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி, எங்க இடியாப்பத்த சாப்பிட்டா போவிங்க சொக்கி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.