ஜென்மாஷ்டமியின் போது கிருஷ்ணர் பற்றி அறிந்து கொள்ள சில தகவல்கள்

இன்று கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் வீடுகள் தோறும் எளிமையாக அதே நேரத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வழிபாட்டு தலங்களில் பஜனைகள், வழிபாடுகள் செய்ய முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த கிருஷ்ண ஜெயந்தியின் போது பகவான் கிருஷ்ணர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள சில விஷயங்கள்.

கிருஷ்ணரின் வாழ்வில் பல பிரச்சினைகள் இருந்தபோதிலும், வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகவே அவர் பார்த்தார். அதனால் வாழ்வு வண்ணமயமாக மாறும் என்பதை அவர் கற்றுத் தருகிறார். இதனால் பகவான் கிருஷ்ணர் மகிழ்ச்சியினர் கடவுளாகிறார்.

கிருஷ்ணர் எல்லா காலத்திலும் நெருக்கடியில் கூட மிகப் பெரிய திட்டமிடுபவராக இருந்தார். அவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், கையாள வேண்டிய நபர்களுக்கு ஏற்பவும் வெவ்வேறு தலைமைத்துவ பாணிகளை பின்பற்றுகிறார். இதனால் தான் அவரால் பாண்டவர்களின் ராணுவத்தை கட்டுப்படுத்த முடிந்தது.

ஓர் ஆசிரியராக, பகவான் கிருஷ்ணர் யோகா, பக்தி, மற்றும் வேதங்களின் உயர்ந்த உண்மைகளை அர்ஜுனனுக்கு கற்பித்தார். இதன் மூலம், கிருஷ்ணர் தன்னை அனைத்து குருக்களுக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் குரு என்பதை நிரூபிக்கிறார்.

குருக்ஷேத்ரா போர்க்களத்தில் 18க்கும் மேற்பட்ட ஆலோசனை அமர்வுகளில் 574 கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளிப்பார். மேலும், அர்ஜுனனுக்கு கற்பிக்கும் முன், அவரது சந்தேகங்கள், குழப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான முடிவுகளையும் கேள்விகளையும் வெளிப்படுத்த அனுமதிக்கிறார். இதுவே ஒரு மிகச் சிறந்த குருவுக்கான மிகப் பெரிய குணம்.