டெஸ்லா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க போவதாக தென்கொரியா அறிவிப்பு

தென்கொரியா: டெஸ்லா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

மின்சார கார்களின் மைலேஜை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியதற்காக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 18 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

குளிர் காலத்தில், டெஸ்லா கார்களின் மைலேஜ் 50 சதவீதம் வரை குறைவதாக தென் கொரிய வர்த்தக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த தகவலை மறைத்து, எரிபொருள் செலவை டெஸ்லா கார்கள் மிச்சப்படுத்துவது போல் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.