புதிய தலைவர் தேர்வுக்கான விசேட கலந்துரையாடல்

புதிய தலைவர் தேர்வுக்கான கலந்துரையாடல்... ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதற்காக தற்போது வரையில் 8 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பொருளாளர் தயா கமகே மற்றும் ருவான் விஜேவர்தன, அர்ஜுன ரணதுங்க, பாலித்த ரங்கே பண்டார, வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய கலந்துராயாடலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்பாக அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை் தொடர்பாகவும் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியலுக்கான பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.