இந்த தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திண்டுக்கல் : ஜனவரி 26, 27 , பிப்ரவரி 3, 4, 5 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம் .... திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 90க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பாத விநாயகர் கோவில் முதல் படிபாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் சன்னதியில் பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

இதனால் குடமுழுக்கு நாள் வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தங்கத்தேர் புறப்பாடும் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 26, 27 , பிப்ரவரி 3, 4, 5 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சோழவந்தான், கொடைக்கானல் ரோடு , ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நிற்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26,27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 அன்று மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி சேரும். பழனி-மதுரை ரயில் பழனியில் இருந்து மதியம் 02.30மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.