உதவித்தொகையினை பெற மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தமிழகத்தில் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. ஏழ்மை காரணமாக மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களும் முன்னதாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.

எனவே அதன்படி, 12-ம் வகுப்பை முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது தொடர்பாக, தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து அதன்படி, மத்திய அரசு ‘ central sector scheme of scholarship for college and university students’ என்ற பெயரில் திறன் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்த உதவித்தொகையினை பெற மாணவர்கள் முழு நேர கல்லூரியில் பயில வேண்டும். இளநிலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.30,000 தொகையும், முதுநிலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000ம் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த உதவித்தொகையினை பெற மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.