தங்கம் விலையில் திடீர் சரிவு..!

உலகமே கொரோனா பாதிப்பின் காரணமாக அரண்டு போய் கிடந்தாலும், மறுபுறம் தங்கம் அதன் வேலையை சரிவர செய்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது, கடந்த வாரம் சில வாரங்களாக மனம் தளராமல் ஏறிக் கொண்டே தான் இருகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. ! இந்தியாவினை பொறுத்தவரையில் இன்றைய அளவில் ஆபரணத் தங்கம் தேவையானது பெரிய அளவில் இல்லாததால், ஆபரண தங்கத்தின் விலை குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி, அது அவ்வளவாக மக்களிடம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். எனினும் உலகளவில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை, பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தின் பக்கம் முதலீடுகளை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த 4 தினங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது.

பொருளாதாரம்

இதற்கு முக்கிய காரணம் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்த தயாராகி வருவது தான். சீன அரசு ஹாங்காங் மீது கொண்டு வர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ,மேலும் இவ்வாறு தடை விதித்தால் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காங் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கமாடிட்டி
சர்வதேச சந்தையில் இன்று அவுன்ஸூக்கு தங்கம் விலையாது 6.50 டாலர் குறைந்து, 1,699.05 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ச்சியான 4வது நாள் வீழ்ச்சியாகும். இதுவே இந்தியாவின் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது (10 கிராம் ) 217 ரூபாய் குறைந்து, 46,115 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கமாடிட்டி வர்த்தகத்தில் இரண்டாவது நாள் சரிவாகும்.

இதே தங்க ஆபரண விலையை பொறுத்தவரையில், சென்னையில் கிராமுக்கு 92 ரூபாய் குறைந்து, 4,431 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து 35,448 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.