தமிழக ஆளுநர் பன்வாரிலால் டில்லிக்கு திடீர் பயணம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி புறப்பட்டுள்ள ஆளுநர் புரோகித் வரும் வெள்ளிக்கிழமை வரை டில்லியில் தங்கியிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் வேல், பேரறிவாளனின் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் டில்லி பயணம் சென்றுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று செல்வாய்க்கிழமை ஆளுநர் புரோகித்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆளுநர் டில்லி சென்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வரும் நிலையில் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.