விலைப்பட்டியல் எனது உரிமை என்கிற திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மேலும், இத்திட்டம் குறித்தான அறிவிப்பு ஒன்றையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வணிகவரித் துறையில் பொதுமக்கள் வாங்கும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் விலைபட்டியலை கேட்டு வாங்கும் போது தான் அரசுக்கான வரி வருவாய் விடுதலின்றி முறையாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பொதுமக்கள் தாங்கள் வாங்கும் சரக்குகளுக்கான விலைபட்டியல்களின் ஒலிநகல்களை வணிகவரித் துறையின் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலமுறை அடிப்படையில் பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தொடர் செலவினமாக ரூ.1.22 கோடி மற்றும் தொடரா செலவினமாக ரூ.30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெறிவித்துள்ளார்.