தமிழகத்தில் இந்த கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வரை பரவலாக பெய்து வருகிறது. வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்துள்ளது.

இதனை அடுத்து இது நாளை மறுநாள் (டிச.08) வட தமிழகம் மற்றும் புதுவையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவ கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் டிச.07 தஞ்சாவூர், கடலூர், திருவாரூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று டிசம்பர் 8ம் தேதி சென்னை, திருவள்ளூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருவேளை இது புயலாக மாறினால் இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 9 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.