சென்னையில் மீண்டும் வெள்ளம் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்; தமிழ்நாடு வெதர்மேன்

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி உடைந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக இருக்கும் நிலையில் தற்போது ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக இருப்பதாகவும் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரி நிரம்பி விடும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ? என்ற அச்சம் சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

செம்பரபாக்கம் ஏரி குறித்த அச்சங்கள் தேவையற்றது. இன்னும் ஒருசில தினங்களில் ஏரி நிரம்பினாலும், ஏரி உடைந்து வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. அதில் இருந்து அதிக அளவு நீர் தானாக வெளியேற்றப்படும். அந்த நீர் அடையாறு ஆற்றில் சென்றாலும் வெள்ள அபாய அளவு கீழ்தான் பாயும் அதனால் சென்னையில் மீண்டும் வெள்ளம் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய வார்த்தைகளை சென்னை மக்கள் தாராளமாக நம்பலாம். இந்த ஆண்டு பெய்யும் மழை எந்தவித சேதத்தையும் ஏற்படாது. அதனால் சென்னை பொதுமக்கள் நிம்மதியுடன் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.