தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களால் பிரான்சில் பரபரப்பு

தாக்குதல் சம்பவங்களால் பரபரப்பு... பிரான்ஸில் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் லியான் பகுதியில், கிரேக்க மரபு வழி பிரார்த்தனை நடக்கும் ஆலயத்தில் புகுந்து 21 வயதான நபர் தாக்குதல் நடத்தினார். இச்சம்பத்தில் பாதிரியார் ஒருவர், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பாதிரியார் பெயர் நிகோலஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர், தேவாலயத்தை மூடும் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர், கடவுள் மிகப்பெரியவர் என்று குறிப்பிட்டவாறே தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் காவல்துறையால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் துனிசியாவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஊடகங்களின்படி, இதுவரை இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இச்சம்பத்தில் தொடர்பு உள்ளது என்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கத்திக்குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வைத் தீவிரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் குறிப்பிட்டு வருகிறது.

முகமது நபியின் கேலிச்சித்திரம் தொடர்பாக ஓர் ஆசிரியர் பிரான்சில் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தை அடுத்து உலக தலைவர்களின் பார்வை பிரான்ஸ் மீது திரும்பியது. பல மத்திய கிழக்கு நாடுகள் பிரான்ஸ் பொருட்களை எதிர்கின்றனர். இத்தகைய சூழலில் இந்த இரண்டு தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதால், இச்சம்பவங்கள் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.