நியூ கலிடோனியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

நியூ கலிடோனியா: நியூ கலிடோனியாவில் உள்ள நௌமியாவில் இன்று அதிகாலை திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதை அடுத்து இந்த நிலநடுக்கம் நௌமியா நகருக்கு கிழக்கே 477 கிமீ தொலைவில் 170 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டது என தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.