வெங்காயம் ஏற்றுமதி செய்யக்கூடாது தடை விதித்தது மத்திய அரசு

தடை விதிப்பு... அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

எனவே விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வகையான வெங்காயம் எற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநரகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.