கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தயாராகிப் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தேர்தலை முன்னிட்டு அவசர அவசரமான அறிவிப்பு என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிலடெல்பியாவில் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க நலவாழ்வுத் துறை, பைசர் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் தயாராகிவிடும் என்றும், மருத்துவத் துறையின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன் இருந்த நிர்வாகத்தில் ஒரு தடுப்பு மருந்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க ஆண்டுக்கணக்கில் ஆனதாகவும், தமது நிர்வாகத்தில் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்

கொரோனா தடுப்பூசியை தேர்தலுக்கு முன் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் அதிபர் டிரம்பின் விருப்பமாக உள்ளது. ஆனால் பரிசோதனைகள் முறைப்படி முடிந்த பின்னரே இதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அவசர, அவசரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சிறந்தது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.