2021 இறுதி வரை கொரோனா நீடிக்கும்; தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை

2021 இறுதி வரை கொரோனா நீடிக்கும் என அமெரிக்க வந்லுநர் எச்சரித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் அந்தோணி பாவுசி கூறியதாவது: அமெரிக்காவில் ஒரு நாளைக்கு புதிதாக சுமார் 40 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், சராசரியாக 1,000 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப்பின் மதிப்பீட்டை நாடு ஏற்கவில்லை என்றும் நோய்த்தொற்றால் நாடு முழுவதும் பாதிப்படைந்துள்ளது என்று கூறியதுடன், கொரோனா தொற்று பாதிப்பு 2021 இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரித்தார்.

மேலும் புள்ளிவிவரங்கள் கவலைக்குரியவை என்று கூறியவர் கொரோனா தொற்று முன்னர் நாம் இருந்ததைப் போலவே இயல்புநிலைக்குத் திரும்புவதை பற்றி பேச வேண்டும் என்றால், அது 2021 ஆம் ஆண்டின் இறுதியாகக் கூட இருக்கலாம் என்று பாவுசி கூறினார்.

கொரோனா பெருந்தொற்று வரலாற்றிலே மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்று ஐ.நா பொதுச் சபை அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது, உயிரிழப்பு 9,24,615 ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.