இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன்,

முதல் அடியில் பூமியையும், 2-ம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், 3-ம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம்,

மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையொட்டி 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.