மூக்கு வழி செலுத்த கூடிய பிபிவி 154 என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி

இந்தியா; கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்தது. ஆரம்ப கட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதை அடுத்து அதன் பிறகு 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கொண்டு வருகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனும் மூன்றாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்காவின் செயிண்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம் எனபல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குவது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூக்கு வழி செலுத்த கூடிய பிபிவி 154 என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.