பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்த மத்திய அரசு

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டாக பிரித்ததிலிருந்து இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் புதிய வரைபடம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த வரைபடத்தில் ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், பஞ்சாப்பின் சில பகுதிகளும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்த வரைபடத்திற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறினார்.

தற்போது பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்களை உரிமை கோருவதை ஏற்கமுடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ,, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.