கொரோனா பரவலை தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டது

கர்நாடகம் : கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்..

மேலும், கதவுகள் மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பள்ளி-கல்லூரி உள்பட கல்வி நிலையங்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வருகை தருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சளி-காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.