மெட்ரோ ரெயில் நிர்வாகமே கவுண்டர்களில் மாஸ்கை விற்பனை அல்லது இலவசமாக கொடுக்க ஏற்பாடு

சென்னை: நாடு முழுவதும் தற்போது மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அதிகமாகி வரும் நோய்த் தொற்று காரணமாக மிக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை பல மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இதனால் தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொண்டு வருகிறது. கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை அனைத்து பயணிகளும் கடைப்பிடிப்பது இல்லை. சிலர் மட்டும் தான் முகக் கவசம் அணிகின்றனர்

இதை அடுத்து தற்போது டிக்கெட் வாங்கி விட்டு செக்கிங் பாயிண்ட் வழியாக உள்ளே நுழையும் போது முகக்கவசம் அணியாதவர்களை ரயில்வே நிர்வாகம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். அதனால் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தவிர்த்து பிற வழிகளை தேர்வு செய்கின்றனர்.

மேலும் பயணிகள் மாஸ்க் அணியாமல் வரும் பயணிகள் திரும்பி அனுப்பபடுவதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் மெட்ரோ ரெயில் நிர்வாகமே கவுண்டர்களில் மாஸ்கை விற்பனை செய்யலாம் அல்லது இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்படுகிறது