வடகொரிய அதிபர் ரஷ்யா சென்றார். அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுப்பு

வடகொரியா: அதிகாரிகள் மறுப்பு... அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றதை உறுதி செய்ய வடகொரியா அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயுதப்படை பாதுகாப்புடன் கூடிய சிறப்பு ரயிலில் வடகொரியாவின் வடகிழக்கு எல்லையை கடந்து அவர் சென்றதாக கூறப்படுகிறது.

கிம்ஜாங்கின் ரஷ்யப் பயணத்தை வடகொரிய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்து விட்டனர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக புதின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, விளாடிவோஸ்டக் நகரில் புதினுடன் கிம்ஜாங் உன் இன்று பேச்சு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.