அரசு மருத்துவமனை .. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவு

சென்னை: மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்தி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து நிகழ்ச்சியின் போது மேடையில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெறுவோரின் சதவிகிதம் 43-லிருந்து 38-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகிதம் சுகப்பிரசவங்களாக குழந்தைகளை பெற்றெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாங்கள் விரும்பும் தலைவர்கள், முன்னோர்கள் பிறந்த நாளிலேயே குழந்தைகளை பிறக்க வேண்டும் என கருதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பதாலேயே, அந்த குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்திவருகிறோம்.

அரசு மருத்துவமனைகளில் அதிகளவு படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபடுகிறது.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அம்மா உணவகம் தொடங்கப்பட்டதாகவும் எனினும் அதனை பயன்படுத்தும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற உத்தரவின்படி அவை இயக்கப்படுகிறது” எனக் கூறினார்.a